ADDED : பிப் 24, 2024 03:46 AM
மது விற்பனை: 8 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று தோகமலை, மாயனுார், சின்னதாராபுரம்,
வெங்கமேடு பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக, மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக குழந்தைவேல், 61; தங்கம்மாள், 57; ராஜமாணிக்கம், 42; கண்ணுசாமி, 47; செல்லத்துரை, 58; தங்க ராசு, 70; மதிவாணன், 54; ராமச்சந்திரன், 47; உள்பட, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இலவச காய்ச்சல் முகாம்அரவக்குறிச்சி: க.பரமத்தி அருகே உள்ள குந்தாணிபாளையம் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. செவிலியர்கள், சுகாதார சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் தனித்தனியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், காய்ச்சல் பாதித்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினார்.
மணப்பாறை இரும்பு வியாபாரி குளத்தில் சடலமாக மீட்பு
குளித்தலை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவார்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 41. பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 6:00 மணியளவில் வழக்கம் போல் வெங்கடேசன் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. சின்ன ரெட்டிபட்டி பனைமரத்து பாறை குழி அருகே, இரும்பு வியாபாரியின் மொபட் சாவி, செருப்பு ஆகியவை உள்ளதாகஇருப்பதாக தகவல் வந்தது.இதுகுறித்து மகன் லோகநாதன், தன் மாமா கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து, குளத்தில் தண்ணீரில் இறந்த நிலையில் இருந்த வெங்கடேசன் உடலை மீட்டனர். தோகைமலை போலீசார் உடல் கூறாய்வுக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனையில் உட்படுத்தினர்.
தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.