Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்

ADDED : ஜூன் 10, 2024 01:20 AM


Google News
மாயனுார் கதவணை அருகே

மீன் விற்பனை மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. காவிரி நீர் கதவணையில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது.

வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து கட்டளை தென்கரை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 120 ரூபாய், விரால், 600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர் சுற்று வட்டார பகுதியில் மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

க.பரமத்தியில் மழை

விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர்: க.பரமத்தி அருகே, புன்னம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

க.பரமத்தி ஒன்றியம், புன்னம் சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக அளவுக்கு அதிகமாக வெயில் வாட்டி வருகிறது. இதனால், பகலில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

தற்போது, சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், மானாவாரியில் சாகுபடி செய்த எள் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளர பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

புதுத்தெருவில் 'டிராபிக்ஜாம்'

ஒழுங்குப்படுத்த கோரிக்கை

கரூர்-

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

கருர், காமராஜ் மார்க்கெட் பகுதியில் இருந்து புதுத்தெரு, சர்ச் கார்னர் போன்ற பகுதிகளுக்கான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. புதுத்தெரு வழியாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் பயணித்து வருவதாலும், முறையற்ற நிலையில வாகனங்கள் குறுக்கே செல்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகழூர் பாசன வாய்க்காலில்

ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

கரூர: கரூர் அருகே, புகழூர் பாசன வாய்க்காலில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம், புகழூர் காவிரியாற்றில் இருந்து பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. புகழூர் வாய்க்கால் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், புகழூர் பாசன வாய்க்காலில் அய்யம்பாளையம் பகுதியில், ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, புகழூர் வாய்க்காலில் அய்யம்பாளையம் பகுதியில், முளைத்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தடுப்பு சுவரில் விளம்பரம்

தடுத்து நிறுத்த கோரிக்கை

கரூர், ஜூன் 10-

கரூர் மாநகராட்சிக்குட்பட்டயில் உள்ள சாலைகளில், போக்குவரத்து சீராக செல்ல சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது. அந்த சுவர்களில் தனியார் விளம்பரங்கள் செய்யப்படுவது தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருர் மாநகராட்சிக்குட்பட்ட, கரூர் காந்திகிராமம், சுக்காலியூர், தான்தோன்றிமலை போன்ற பகுதிகளில் விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையின் மையத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த தடுப்பு சுவர்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பு சுவர்களில் விளம்பரங்கள் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us