/உள்ளூர் செய்திகள்/கரூர்/கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புகடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று கும்பாபி-ஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக, ஓராண்டுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை, 5:50 மணியளவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, விக்னேஷ்வர பூஜை, லட்ச்சார்ச்சனை செய்தனர். நேற்று அதி-காலை நான்காம் கால யாக கேள்வி பூஜை நிறைவடைந்ததும், மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.பின், வேத மந்திரங்கள் முழங்க விமான ராஜகோபுரம், கடம்பவ-னேஸ்வரர், அம்மன், விநாயகர், முருகன், கால பைரவர் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவ-காமசுந்தரி, மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழிதியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.