/உள்ளூர் செய்திகள்/கரூர்/தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவமழை; மண் பரிசோதனைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்புதீவிரம் காட்டும் தென்மேற்கு பருவமழை; மண் பரிசோதனைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவமழை; மண் பரிசோதனைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவமழை; மண் பரிசோதனைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவமழை; மண் பரிசோதனைக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 03, 2024 06:58 AM
கரூர் : தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்ட துவங்கி உள்ள நிலையில், விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து, அட்டைகள் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டுதோறும், ஜூன் முதல் வாரத்தில் கேரளா கடற்கரை பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். அதை தொடர்ந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை தீவிரம் காட்டும். செப்டம்பர் வரை, 70 சதவீத தென்மேற்கு பருவ மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடகா அணைகளில் இருந்து, உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விட வாய்ப்புள்ளது. மேலும், சராசரி அளவு மழை பெய்யும் மாவட்டங்களாக கரூர், திருச்சி, தஞ்சாவூர் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் உற்பத்தியை துவக்க வசதியாக மண் பரிசோதனை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:நடப்பாண்டு, தென்மேற்கு பருவ மழை ஓரளவு கை கொடுக்கும் என தெரிகிறது. காவிரி, அமராவதி ஆறு பாயும் மாவட்டமான கரூர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் உள்ள, விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து, மண்ணின் தன்மை, என்ன பயிரிட லாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.