/உள்ளூர் செய்திகள்/கரூர்/முத்தாலம்மன் கோவிலில் விழா; பக்தர்கள் வழிபாடுமுத்தாலம்மன் கோவிலில் விழா; பக்தர்கள் வழிபாடு
முத்தாலம்மன் கோவிலில் விழா; பக்தர்கள் வழிபாடு
முத்தாலம்மன் கோவிலில் விழா; பக்தர்கள் வழிபாடு
முத்தாலம்மன் கோவிலில் விழா; பக்தர்கள் வழிபாடு
ADDED : ஜூன் 03, 2024 06:58 AM
கரூர் : கடவூர் அருகே, தரகம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.கரூர் மாவட்டம், கடவூர் அருகே தரகம்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில், 15 நாள் காப்பு கட்டி விழா தொடங்கியது.
அன்று பூஜை பெட்டிகள், சாமிகளின் ஆபரண பெட்டிகளை கங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாரியம்மன், பகவதியம்மன் மற்றும் முத்தாலம்மன் சாமிகளுக்கு கரகம் பாலிக்கப்பட்டது. காவல்தெய்வங்கள் முன்செல்ல தாரை தப்பட்டை முழங்க, வாண வேடிக்கைகளுடன் மின் அலங்காரம் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் சாமிகள் திருவீதி உலா வந்தது. வீதி நெடுகிலும் காத்திருந்த பக்தர்கள், அம்மனுக்கு அபிேஷம் செய்து வழிபட்டனர். பின்னர் கோவிலில் குடி புகுந்தவுடன் சிறப்பு அபிேஷகம் நடந்தது.பின் அம்மன்களுக்கு பால், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, தேன், திருமஞ்சனம் உள்பட, 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் திருக்கரகங்கள் ஊர்வலமாக அழைத்து சென்று, கங்கை கரையில் கரைத்தனர். இன்று மாலை பாம்பலம்மன் கோவிலில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை கருப்பசாமி, முனியப்ப சாமிகளுக்கு பொங்கல் வைத்து படைத்து வழிபடுகின்றனர். அன்று இரவு முனியப்பசாமி கோவிலில் அடசல் பூஜை நடைபெறுகிறது. ஜூன், 7ல் பசுபதியம்மனுக்கு பொங்கல் வைத்து மாளவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்றுடன் விழா நிறைவுபெறுகிறது