/உள்ளூர் செய்திகள்/கரூர்/வருமான வரி அதிகாரிகள் கொங்கு மெஸ்சில் ஆய்வுவருமான வரி அதிகாரிகள் கொங்கு மெஸ்சில் ஆய்வு
வருமான வரி அதிகாரிகள் கொங்கு மெஸ்சில் ஆய்வு
வருமான வரி அதிகாரிகள் கொங்கு மெஸ்சில் ஆய்வு
வருமான வரி அதிகாரிகள் கொங்கு மெஸ்சில் ஆய்வு
ADDED : ஜன 11, 2024 01:41 AM

கரூர்:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில், கடந்தாண்டு ஜூன், 14ல் கைது செய்யப் பட்டு, சென்னை புழல் சிறையில் இருக்கிறார், அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரது நண்பரான, கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், 48, என்பவருக்கு சொந்தமான, கரூர் - ஈரோடு சாலையில் உள்ள கொங்கு மெஸ் நிறுவனம் மற்றும் அவரது வீட்டில், கடந்த ஆண்டு மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு மீண்டும், வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர் ஏழு பேர், கரூர் - கோவை சாலையில் உள்ள, கொங்கு மெஸ் நிறுவனத்தின் புதிய நான்கு மாடி கட்டடம் மற்றும் பேக்கரியில் ஆய்வு செய்தனர்; பகல், 1:30 மணிக்கு ஆய்வை முடித்து புறப்பட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை வழங்கப்பட உள்ளது. ஜாமின் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கரூர் மாவட்ட தி.மு.க., வினர் உள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான, கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியத்தின் நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் நேற்று ஆய்வு செய்ததால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.