Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டல் கூட்டம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டல் கூட்டம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டல் கூட்டம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டல் கூட்டம்

ADDED : ஜூன் 26, 2025 01:46 AM


Google News
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூடுதல் அலுவலக கூட்டரங்கில், பெற்றோரை இழந்த உயர்கல்வி தொடராத மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டல் இரண்டாம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது.

இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில், 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மொத்தம், 9,416 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள், உயர் கல்வியில் சேர்ந்து தங்களுடைய அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றமடைய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேல்நிலை கல்வி முடித்து, உயர்கல்வியில் இணைந்து படிக்க இயலாத மாணவர், மாணவியர் கண்டறிந்து, அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலைகளால், மேற்படிப்பை தொடர இயலாதவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள், குறைதீர்க்கும் கூட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. உயர்கல்வி வழிகாட்டல் தேவைப்படுவோர், கட்டணமில்லா 9566566727 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு

பேசினார்.

கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி, உதவி ஆணையர் கலால் கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ உள்பட பலர்

பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us