/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ராயனுார் சாலையில் கனரக வாகனங்களால் நெரிசல் ராயனுார் சாலையில் கனரக வாகனங்களால் நெரிசல்
ராயனுார் சாலையில் கனரக வாகனங்களால் நெரிசல்
ராயனுார் சாலையில் கனரக வாகனங்களால் நெரிசல்
ராயனுார் சாலையில் கனரக வாகனங்களால் நெரிசல்
ADDED : செப் 19, 2025 01:16 AM
கரூர் :கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனுார் சாலையில், கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் மாநகர பகுதிகளில் இருந்து திண்டுக்கல், திருச்சி, மதுரை பைபாஸ் சாலைகள், கோடங்கிப்பட்டி, ஈசநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர், ராயனுார் வழியாக செல்கின்றன.
இந்த சாலையில், திருமாநிலையூர் பகுதியில் இருந்து குறிப்பிட்ட துாரம் வரை சாலை குறுகலாக உள்ளது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில், வாகன போக்கு
வரத்து எளிதாக நடைபெறாமல், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், குறுகிய சாலையில் சில கனரக வாகனங்கள் வந்து செல்வதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறு
இன்றி கனரக வாகனங்கள் வந்து செல்ல, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்