/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குழு ஆர்ப்பாட்டம்ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குழு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் வட்டாரம் சார்பில், நகர செயலாளர் செல்வம் தலைமையில், கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண், 243 ஐ ரத்து செய்ய வேண்டும், நீதிமன்ற வழக்கு முடிந்த பிறகு, புது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், கூட்டு நடவடிக்கை குழு பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, பெஞ்சமின் சகாயராஜ், ராஜா, மோகன், மந்திரி உள்பட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.