Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கலெக்டர் ஆபீஸில் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கலெக்டர் ஆபீஸில் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கலெக்டர் ஆபீஸில் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கலெக்டர் ஆபீஸில் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ADDED : ஜூலை 09, 2024 05:43 AM


Google News
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமையில் ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் அட்டை கோருதல் உள்பட மொத்தம், 578 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம், 66 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இருவருக்கு தலா, 1.6 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, ஒரு பார்வையற்ற மாணவருக்கு, 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பிரெய்லி முறையில் படிக்கும் சாதனம் என மொத்தம், 20 பயனாளிகளுக்கு, 3.53 லட்சம் ரூபாய்- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ.,க்கள் முகமதுபைசல் (கரூர்), தனலெட்சுமி (குளித்தலை), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் (பொ) ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகவடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us