/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புகை மண்டலத்தில் அரசு பள்ளிகள் மாணவ, மாணவியர் சிக்கி தவிப்பு புகை மண்டலத்தில் அரசு பள்ளிகள் மாணவ, மாணவியர் சிக்கி தவிப்பு
புகை மண்டலத்தில் அரசு பள்ளிகள் மாணவ, மாணவியர் சிக்கி தவிப்பு
புகை மண்டலத்தில் அரசு பள்ளிகள் மாணவ, மாணவியர் சிக்கி தவிப்பு
புகை மண்டலத்தில் அரசு பள்ளிகள் மாணவ, மாணவியர் சிக்கி தவிப்பு
ADDED : ஜூன் 09, 2025 03:42 AM
கரூர்: கரூர் அருகே, சாலையில் கொட்டப்படும் குப்பைக்கு தீயிட்டு கொளுத்துவதால், பள்ளி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளா-கின்றனர்.
கரூர்-கோவை சாலை, சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கோவை சாலையில் வர்த்தக நிறுவ-னங்கள், ஓட்டல்கள், டீ கடைகள் அதிகளவில் செயல்பட்டு வரு-கிறது. இதில் சேரும் குப்பைகள் அரசு பள்ளிகளுக்கு அருகே கொட்டப்படுகிறது. ஆனால், குப்பைகளை பஞ்., நிர்வாகம் சரி-வர அள்ளாததால், அப்பகுதியில் உள்ள சிலர், குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால், குப்பையில் இருந்து எழும் புகை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்கிறது.அப்போது, வகுப்பறையில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்க-ளுக்கு இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இது-குறித்து பலமுறை சில ஆசிரியர்கள், புகார் தெரிவித்தும் பஞ்சா-யத்து ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை.
எனவே, கரூர்-கோவை சாலையில் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், அரசு பள்ளிகளுக்கு அருகே கொட்டப்படும் குப்பை-களை, உடனடியாக அள்ளி அப்புறப்படுத்த, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.