/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை தேவைகரூர் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை தேவை
கரூர் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை தேவை
கரூர் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை தேவை
கரூர் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை தேவை
ADDED : மார் 11, 2025 06:59 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், புதிய இலவச கழிப்பறை தேவை என, அரவக்குறிச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கார்த்தி என்பவர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் பஸ் ஸ்டாண்ட் மாநகராட்சி சார்பில், இலவச கழிப்பறை உள்ளது. இதை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு, செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறையை, பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கழிப்பறைக்கு செல்ல, 10 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே, அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.