/உள்ளூர் செய்திகள்/கரூர்/பா.ஜ.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,பா.ஜ.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,
பா.ஜ.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,
பா.ஜ.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,
பா.ஜ.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,
ADDED : பிப் 06, 2024 11:19 AM
கரூர்: கரூர் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் பா.ஜ.,வில் இணைகிறார்.
கரூரை சேர்ந்தவர் வடிவேல், 75. அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர். இவர் கடந்த, 1977, 1984ல், கரூர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, ஜானகி அணி சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட வடிவேல் தோல்வியை தழுவினார்.
அதற்கு பிறகு வடிவேலுவுக்கு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் வடிவேல் இணைந்தார். தொடர்ந்து பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இணைந்த பிறகு, அ.தி.மு.க.,வில் நீடித்து வந்தார். இந்நிலையில், அகில இந்திய பா.ஜ., தலைவர் நட்டாவை சந்தித்து விரைவில், பா.ஜ.,வில் இணைய உள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் கூறுகையில்,'' பா.ஜ.,வில் இணைய உள்ளதாக வரும் தகவல் உண்மைதான். பா.ஜ.,வில் இணைந்த பிறகு, அதற்கான காரணம் குறித்து தெரிவிக்கிறேன்,'' என்றார்.