/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுப முகூர்த்த நாளையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு சுப முகூர்த்த நாளையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு
சுப முகூர்த்த நாளையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு
சுப முகூர்த்த நாளையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு
சுப முகூர்த்த நாளையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு
ADDED : ஜூன் 07, 2025 01:27 AM
கரூர் :கரூர் பூ மார்க்கெட்டில், சுப முகூர்த்த நாளையொட்டி, பூக்கள் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மல்லிகை உள்ளிட்ட பூக்கள், கரூர் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. சுப விசேஷங்கள் அதிகம் நடைபெற்று வரும், நடப்பு வைகாசி மாதம் நிறைவு பெறும் நிலையில், இன்று சுப முகூர்த்த நாளாக அமைந்துள்ளது.
இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பூ மார்க்கெட்டில், நேற்று பூக்கள் விலை அதிகரித்தது. கடந்த மாதம், 1,000 ரூபாய் வரை மல்லிகை பூ ஒரு கிலோ, நேற்று, 1,800 ரூபாய் வரை விற்றது. அதேபோல் முல்லை பூ, 350 ரூபாயில் இருந்து, 500 ரூபாய், ரோஜா, 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய், செவ்வந்தி, 250 ரூபாயில், 350 ரூபாய், அரளி, 80 ரூபாய், சம்பங்கி, 150 ரூபாய்க்கு விற்றது.