வரகூர் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி
வரகூர் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி
வரகூர் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பணி
ADDED : பிப் 24, 2024 03:43 AM
கிருஷ்ணராயபுரம்: வரகூர் கிராமத்தில், விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர் கிராமத்தில், பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. கோழிக்கொண்டை, செண்டுமல்லி ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வெயில் அதிகம் அடிப்பதால் செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது. வளர்ந்த பூக்களை விவசாயிகள் அறுவடை செய்து, உள்ளூரில் உள்ள பூக்கள் விற்பனை செய்யும் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. இதில் கோழிக்கொண்டை பூக்கள் கிலோ, 50 ரூபாய், செண்டு மல்லி கிலோ, 60 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.