/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மீன் வளர்ப்பு மானியம் கரூர் கலெக்டர் தகவல் மீன் வளர்ப்பு மானியம் கரூர் கலெக்டர் தகவல்
மீன் வளர்ப்பு மானியம் கரூர் கலெக்டர் தகவல்
மீன் வளர்ப்பு மானியம் கரூர் கலெக்டர் தகவல்
மீன் வளர்ப்பு மானியம் கரூர் கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 27, 2025 01:15 AM
கரூர், மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்ட மீன் வளர்ப்பு விவசாயிகள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு, ஒரு ஹெக்டேர் பரப்பளவு மீன் பண்ணைக்கு, 10,000 மீன் குஞ்சுகளுக்கு, 5,000 ரூபாய்- மானியம் வழங்கப்படவுள்ளது. 2025--26ம் ஆண்டிற்கு மீன் வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, கரூர் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம், 35/பி/8 A, கருப்பகவுண்டன் புதுார், பசுபதி பாளையம், கரூர் என்ற முகவரியிலும், 80563 13868 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.