/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டென்சிங் நார்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு டென்சிங் நார்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
டென்சிங் நார்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
டென்சிங் நார்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
டென்சிங் நார்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 27, 2025 01:15 AM
கரூர், மத்திய அரசு சார்பில், டென்சிங் நார்கே சாகச விருதுக்கு வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் சார்பில் நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்த நபர்களுக்கு, ஆண்டுதோறும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. இதற்கு,
https://awards.gov.in/- என்ற இணையதள முகவரியில் வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், கரூர் (அல்லது) 7401703493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
பாலத்தில் மணல் குவியல் விபத்து ஏற்படும் அபாயம்கரூர், ஜூன் 27
கரூர்-திருச்சி பைபாஸ் சாலை அருகேயுள்ள மேம்பாலத்தின் இருபுறமும் குவிந்துள்ள மணலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் இருந்து வெள்ளியணை, மணப்பாறை, தரகம்பட்டி, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்ககல்பட்டி வழியாக செல்கிறது. வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் சாலையோரம் இருபுறமும் அதிகளவு மண் படர்ந்துள்ளது. இரவில் டூவீலரில் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, விபத்தை ஏற்படுத்தும் வகையில் குவிந்துள்ள மணல் பரப்புகளை அகற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.