Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா குறைதீர் கூட்டத்துக்கு குறைந்தளவே வந்த மக்கள்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா குறைதீர் கூட்டத்துக்கு குறைந்தளவே வந்த மக்கள்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா குறைதீர் கூட்டத்துக்கு குறைந்தளவே வந்த மக்கள்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா குறைதீர் கூட்டத்துக்கு குறைந்தளவே வந்த மக்கள்

ADDED : மே 27, 2025 01:26 AM


Google News
கரூர், கரூர் மாரியம்மன் கோவில் விழாவில் மக்கள் மும்மரமாக இருப்பதால், நேற்று நடந்த கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. நேற்று குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளி களுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் மனுக்கள் அளித்தனர்.

தற்போது கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நாளை கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கோடை விடுமுறைகளுக்கு பலர் வெளியூர் சென்று உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு குறைந்தளவே மக்கள் வந்திருந்தினர். வழக்கமாக, 350 முதல், 400 மனுக்களுக்கு மேல் வரும் நிலையில் நேற்று, 261 மனுக்களை மட்டுமே வந்தன. இதனால், கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது, சிலர்

மட்டுமே மனுக்கள் அளித்து

சென்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மூன்று பயனாளிகளுக்கு காதொலி கருவி, 1 பயனாளிக்கு பிரெய்லி கைக்கடிகாரம் மற்றும், 1 பயனாளிக்கு மூன்று

சக்கர சைக்கிள் என மொத்தம், ஐந்து பேருக்கு, 23,355 ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள்

வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us