/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மண்டபத்தில் நகை, பணம் திருடிய கரூரை சேர்ந்த தந்தை, மகன் கைது மண்டபத்தில் நகை, பணம் திருடிய கரூரை சேர்ந்த தந்தை, மகன் கைது
மண்டபத்தில் நகை, பணம் திருடிய கரூரை சேர்ந்த தந்தை, மகன் கைது
மண்டபத்தில் நகை, பணம் திருடிய கரூரை சேர்ந்த தந்தை, மகன் கைது
மண்டபத்தில் நகை, பணம் திருடிய கரூரை சேர்ந்த தந்தை, மகன் கைது
ADDED : ஜூன் 10, 2025 01:41 AM
ராசிபுரம், ராசிபுரம் அருகே, திருமண மண்டபத்தில் புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்-சேலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், கடந்த, 6ல் ராசிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீநிவாஸ் மற்றும் வெண்ணந்துார் அடுத்த அனந்தகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜவேலு மகள் அகிலா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. வரவேற்பு முடிந்த பின், மணமக்கள் வீட்டார் சாப்பிட சென்றுள்ளனர். மீண்டும் வந்து பார்த்தபோது மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த, 26.5 பவுன் தங்க நகை, மொய் பணம், மூன்று லட்சம் ரூபாய் ஆகியவற்றை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து,
ராசிபுரம் போலீசில், ராஜவேலு புகாரளித்தார்.
டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், மூன்று தனிப்படை அமைத்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று, ஏ.டி.சி., டிப்போ அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை, போலீசார் ராசிபுரம் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், கரூர் மாவட்டம், நரசிம்மபுரம், தெற்கு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் பாலமுருகன், 55, அவரது மகன் ஹரிகிருஷ்ணன், 19, ஆகிய இருவரும், திருமண மண்டபத்தில் உறவினர் போல் வந்து மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த, நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசாரிடம் சிக்காமல் இருக்க பழனிக்கு சென்று ஹரிகிருஷ்ணன், மொட்டை அடித்துக்கொண்டு வந்தது தெரிந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த ராசிபுரம் போலீசார், நகை, பணத்தை மீட்டனர். இவர்கள் மீது திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.