/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாணவி பலாத்காரம் தொழிலாளி மீது போக்சோ வழக்கு மாணவி பலாத்காரம் தொழிலாளி மீது போக்சோ வழக்கு
மாணவி பலாத்காரம் தொழிலாளி மீது போக்சோ வழக்கு
மாணவி பலாத்காரம் தொழிலாளி மீது போக்சோ வழக்கு
மாணவி பலாத்காரம் தொழிலாளி மீது போக்சோ வழக்கு
ADDED : ஜூன் 10, 2025 01:40 AM
மேட்டூர், ஜூன் 10
பிளஸ் 2 படித்த மாணவியை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மீது, போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி, கரும்புசாலையூரை சேர்ந்த கூலி தொழிலாளி கிேஷார், 23. அருகிலுள்ள, 16 வயது பிளஸ் 2 முடித்த மாணவியை காதலித்துள்ளார். அப்போது கிேஷார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை வரவழைத்து, பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார். அவரது பெற்றோர், மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்ததால் கடந்த, 31ல், சேலம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக, மேட்டூர் அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி, தலைமறைவான கிேஷாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகிறார்.