/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 14, 2025 07:40 AM
கரூர்: புகழூரில், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் சோளம், நெல், வாழைக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம், புகழூர், புங்கோடை, சேமங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. வெள்ளை பச்சைகொடி, கற்பூரம் ஆகிய இரு ரக வெற்றிலை சாகுபடி உள்ளது. வெற்றிலையில் அடிக்கடி செதில் பூச்சி தாக்குதல், இலைக்கருகல் போன்ற நோய் தாக்குதலால், சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. வெற்றிலையை தாக்கும் நோய்களுக்கு உடனே தீர்வு காணவும், வெற்றிலை சாகுபடியை மேம்படுத்தவும், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து, புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது: புகழூர் வட்டார பகுதியில், 1,500 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறோம். வெற்றிலைக்கு அதிக தண்ணீர் தேவை. மாவட்டத்தில் காவிரி கரையோரம் வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. வெற்றிலையில் பூஞ்சான் தாக்குதல், இலைக்கருகல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அதிக பனி இருக்கும்போதும், நோய் தாக்கம் ஏற்பட்டு நிதி இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நோய் தாக்குதலில் இருந்து மீள்வதற்கு, புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். ஆராய்ச்சி மையம் இருந்தால், நோய் தாக்கிய பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து, உடனே அதற்கு தீர்வு காண்பர். குறைந்த செலவில் அதிக உற்பத்தியை உருவாக்கும் வகையில், புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தும் நிலையும் உருவாகும். இவ்வாறு கூறினர்.