/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துவரம் பருப்பு உற்பத்தி பணி மும்முரம் துவரம் பருப்பு உற்பத்தி பணி மும்முரம்
துவரம் பருப்பு உற்பத்தி பணி மும்முரம்
துவரம் பருப்பு உற்பத்தி பணி மும்முரம்
துவரம் பருப்பு உற்பத்தி பணி மும்முரம்
ADDED : ஜூன் 11, 2025 01:50 AM
கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம் பகுதியில், துவரம் பருப்பு உற்பத்தி பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்திருந்தனர். இரண்டு மாதத்துக்கு முன்பு துவரை அறுவடை செய்யப்பட்டு, தரம் பிரித்து துவரம் பருப்பாக மாற்றுவதற்கான பணிகளில் விவசாயி தொழிலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதில் துவரையை, நல்ல செம்மண் கொண்டு கலவை செய்து வெயிலில் உலர்த்தப்படுகிறது, பிறகு துவரையை, அரவை மில்களில் கொண்டு சென்று இரண்டாக உடைக்கப்படுகிறது. இதில் உலர்ந்த துவரை, துவரம் பருப்பாக மாற்றப்படுகிறது. தரமான பருப்பாக இருப்பதால் ஒரு கிலோ துவரம் பருப்பு, 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய தொழிலாளர்களுக்கு ஓரளவு வருமானம்
கிடைத்து வருகிறது.