/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அண்ணா சாலையில் கொளுத்தப்படும் குப்பையால் ஓட்டுனர்கள், மக்கள் அவதி அண்ணா சாலையில் கொளுத்தப்படும் குப்பையால் ஓட்டுனர்கள், மக்கள் அவதி
அண்ணா சாலையில் கொளுத்தப்படும் குப்பையால் ஓட்டுனர்கள், மக்கள் அவதி
அண்ணா சாலையில் கொளுத்தப்படும் குப்பையால் ஓட்டுனர்கள், மக்கள் அவதி
அண்ணா சாலையில் கொளுத்தப்படும் குப்பையால் ஓட்டுனர்கள், மக்கள் அவதி
ADDED : மே 12, 2025 03:11 AM
கரூர்: கரூர் அருகே அண்ணா சாலையில், குப்பைகளுக்கு தீ வைப்-பதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் முதல், சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை, அண்ணா சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, வெங்கமேடு ரயில்வே
மேம்பாலம் முதல், சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை, அண்ணா சாலை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் - ஈரோடு ரயில்வே வழித்தடத்தையொட்டி, அண்ணா சாலை செல்கிறது. இந்நிலையில், அந்த பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்-பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அகற்றுவ-தில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள குப்பை, தீ வைத்து
எரிக்கப்படுகிறது. அதில், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களும் எரிவதால், துர்நாற்றமும், பெரும் சுகாதார சீர்-கேடும் ஏற்படுகிறது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அண்ணா சாலைகளில் குப்பைகளை, தீ வைத்து எரிப்பதை தடுக்க, மாநகராட்சி
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


