/உள்ளூர் செய்திகள்/கரூர்/பஞ்சப்பட்டி, குளித்தலையில் தி.மு.க., சாதனை கூட்டம்பஞ்சப்பட்டி, குளித்தலையில் தி.மு.க., சாதனை கூட்டம்
பஞ்சப்பட்டி, குளித்தலையில் தி.மு.க., சாதனை கூட்டம்
பஞ்சப்பட்டி, குளித்தலையில் தி.மு.க., சாதனை கூட்டம்
பஞ்சப்பட்டி, குளித்தலையில் தி.மு.க., சாதனை கூட்டம்
ADDED : மே 12, 2025 03:11 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்-லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள், கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் குளித்தலை ஒன்றிய செயலாளர்கள் கதிரவன், தியாகராஜன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குளித்தலை எம்.எல்.ஏ.,
மாணிக்கம், தலைமை பேச்சாளர் சந்திரன் ஆகியோர், அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற, உறுப்பி-னர்கள் அயராது பாடுபட வேண்டும் என பேசினர்.
இதேபோல் குளித்தலை சுங்ககேட்டில் குளித்தலை நகரம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்து, குளித்தலை தொகுதிக்கு செய்த சாதனைகளை பட்டிய-லிட்டு
பேசினார். முன்னாள் மாவட்ட பஞ்..துணைத் தலைவர் தேன்-மொழி, நகராட்சி தலைவர் சகுந்தலா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


