/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுண்ணாம்பு அடிப்பதில் தகராறு: 12 பேர் மீது வழக்கு சுண்ணாம்பு அடிப்பதில் தகராறு: 12 பேர் மீது வழக்கு
சுண்ணாம்பு அடிப்பதில் தகராறு: 12 பேர் மீது வழக்கு
சுண்ணாம்பு அடிப்பதில் தகராறு: 12 பேர் மீது வழக்கு
சுண்ணாம்பு அடிப்பதில் தகராறு: 12 பேர் மீது வழக்கு
ADDED : செப் 11, 2025 01:22 AM
குளித்தலை குளித்தலை அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி செல்வமணி, 45. இவர், கடந்த ஜூலையில் தன் வீட்டு காம்பவுண்ட் சுவரில் சுண்ணாம்பு அடித்துக்கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே வசிப்பவர் ரமணி; இவர், 'சுண்ணாம்பு அடிக்கும்போது, தன் வீட்டு சுவரில் படக்கூடாது' எனக்கூறி, தகாத வார்த்தையில் திட்டி, தாக்கியுள்ளார். மேலும், ரமணியின் உறவினர்களும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து செல்வமணி கொடுத்த புகார்படி, தண்டபாணி, மணிமாறன், மாலா, நிவேதா, ரமணி, விஜயா, சின்னம்மாள், தவசி ஆகிய, எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.அதேபோல், மாலா, 45, கொடுத்த புகார்படி, செல்வமணி, ராஜ்குமார், பிரேமா, துரைராஜ் ஆகிய, நான்கு பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.