Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரவக்குறிச்சியில் நீராதாரத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அரவக்குறிச்சியில் நீராதாரத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அரவக்குறிச்சியில் நீராதாரத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அரவக்குறிச்சியில் நீராதாரத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

ADDED : ஜன 11, 2024 11:41 AM


Google News
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், நீராதாரத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி தெற்கே, குமரண்டான்வலசு, ஈஸ்வரன் கோவிலில் இருந்து கரடிபட்டி வரை நங்காஞ்சி ஆற்றின் மேற்கு கரையோரம், அரசு தலைமை மருத்துவமனை, போலீஸ் குவார்ட்டர்ஸ், எஸ்.பி., நகர், காந்தி நகர், தாலுகா அலுவலகம், கிழக்கு தெரு, முதலியார் தெரு, போஸ்ட் ஆபீஸ் பின்புறம் மற்றும் கரடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள காலி இடங்கள், நீர்நிலைகள் என, எங்கு பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதிலிருந்து, கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை துன்புறுத்தி வருகிறது. மேலும், மக்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகிலேயே, நங்காஞ்சி ஆறு, அதன் கரையோர பகுதியிலும் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் கிழக்கு பகுதியிலும் நங்காஞ்சி ஆறு முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் முட்காடு போல் வளர்ந்துள்ளன.

இதனால் இந்த இடத்தில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும், ஆற்றில் சாக்கடை உள்ளிட்ட கழிவுகள் தேங்குவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us