/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா
வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா
வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா
வில்லுக்காரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா
ADDED : ஜூன் 26, 2025 01:45 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, சின்னியம்பாளையம் பஞ்சாயத்து, வில்லுக்காரன்பட்டியில், கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில், நேற்று முன்தினம் மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல் என, 14 ஊர் மந்தை நாயக்கர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு, மாடு மாலை தாண்டுவதற்கான நிகழ்ச்சிகள் நடந்தன. மொத்தம், 180 மாடுகள் கலந்து கொண்டன. 2 கி.மீ., தொலைவில் இருந்து ஓட்டி விடப்பட்ட மாடுகள் எல்லை கோட்டை நோக்கி ஓடி வந்தன.
புதுக்கோட்டை மாவட்டம், சேமங்கலத்தை சேர்ந்த ஐயா சாமி மந்தை மாடு முதலாவதாகவும், திருச்சி மாவட்டம், ராஜ கோடங்கிபட்டியை சேர்ந்த ராஜா மந்தை மாடு இரண்டாவதாகவும், இனுங்கூர் சுக்காம்பட்டியை சேர்ந்த விரிகஜல் மந்தை மாடு மூன்றாவதாகவும் வந்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் மந்தைதாரர்களுக்கு எலுமிச்சை கனி பரிசாக வழங்கப்பட்டது.
ஏராளமானோர் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.