/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சோளப்பயிர்கள் கரூர் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சோளப்பயிர்கள்
கரூர் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சோளப்பயிர்கள்
கரூர் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சோளப்பயிர்கள்
கரூர் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சோளப்பயிர்கள்
ADDED : ஜூன் 16, 2025 07:42 AM
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பகுதியில் கால்நடை தீவனத்துக்காக சாகுபடி செய்யப்பட்ட சோளப்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த பிப்., மாதம் நிறுத்தப்பட்டது. பின், சம்பா நெல் அறுவடை நிறைவு பெற்றதால், குறுகிய கால பயிரான சோளம், கால்நடைகளின் தீவனத்துக்காக, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சோளம் பயிரிடப்பட்டது. தற்போது, சோளப்பயிர்கள் முளைத்து வளர்ந்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக தற்போது வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் சோளப்பயிர்கள் அறுவடை நிறைவு பெற்ற பின், நெல் சாகுபடி தொடங்க உள்ளது. அப்போது, அமராவதி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர், நெல் சாகுபடிக்காக திறக்கப்பட உள்ளது.