/உள்ளூர் செய்திகள்/கரூர்/மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி சுறுசுறுமண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி சுறுசுறு
மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி சுறுசுறு
மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி சுறுசுறு
மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி சுறுசுறு
ADDED : ஜூலை 03, 2024 07:31 AM
கரூர்: கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மண்மங்கலம் பிரிவில் உயர்-மட்ட மேம்பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகி-றது.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுபாளையம், மண்-மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, மதுரை நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங் கோவில் வளைவு, திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன.
இதனால், அந்த பகுதிகளில் கடந்த, 18 ஆண்டுகளாக ஏற்பட்ட பல விபத்துகளில், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம், அந்த பகுதிகளில் சாலைமறி-யலில் ஈடுபடுவர். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் அணிவகுத்து நிற்கும்.
இதனால், விபத்து ஏற்படும் பகுதிகளில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், முதல் கட்டமாக கரூர் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலங்கள்,
கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்
பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
தற்போது, மண்மங்கலம் பிரிவில், கீழ் பகுதியில் வாகனங்கள் செல்லும் அளவுக்கு, உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்-பாக நடந்து வருகிறது. இதனால், கரூர் நகரம், வாங்கல், நெரூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.