/உள்ளூர் செய்திகள்/கரூர்/கல்லுாரி மாணவி மாயம்; போலீசில் தந்தை புகார்கல்லுாரி மாணவி மாயம்; போலீசில் தந்தை புகார்
கல்லுாரி மாணவி மாயம்; போலீசில் தந்தை புகார்
கல்லுாரி மாணவி மாயம்; போலீசில் தந்தை புகார்
கல்லுாரி மாணவி மாயம்; போலீசில் தந்தை புகார்
ADDED : ஜூலை 11, 2024 12:48 AM
கரூர்: கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ைஹ ஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் நந்தினி, 19, தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த, 9ல் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு செல்வதாக கூறி, விட்டு சென்ற நந்தினி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, நந்தினியின் தந்தை செல்வம் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.