/உள்ளூர் செய்திகள்/கரூர்/பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபர் கைதுபெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபர் கைது
பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபர் கைது
பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபர் கைது
பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபர் கைது
ADDED : ஜூலை 11, 2024 12:48 AM
கரூர்: கரூரில், தனியார் நிறுவன பெண் ஊழியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிய வாலிபரை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், காருடையாம்பாளையம் வால்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் மாரிமுத்து, 30, தனியார் நிறுவன ஊழியர்.
இவர், 24 வயதுடைய பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி, கரூர்-கோவை சாலையில் உள்ள அலுவலகத்தில், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த மாரிமுத்து, மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து, பெண் கொடுத்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார், மாரிமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர்.