/உள்ளூர் செய்திகள்/கரூர்/லாலாப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவீதி உலாலாலாப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவீதி உலா
லாலாப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவீதி உலா
லாலாப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவீதி உலா
லாலாப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவீதி உலா
ADDED : ஜூன் 20, 2024 07:03 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் அம்மன் திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு கோவில் விழாவை முன்னிட்டு கடந்த, 16ல் காவிரி ஆற்றில் இருந்து அம்மன் கரகம் பாலித்து திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டது. நேற்று காலை அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருத்தேரில் வைத்து லாலாப்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக திரு வீதி உலாவாக அம்மன் எடுத்து வரப்பட்டது. மேலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு பூஜை செய்து வழிபட்டனர். திரளானோர் கலந்து கொண்டனர்.