/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாஜி அமைச்சருக்கு முன் ஜாமின் கிடைக்குமா? இன்று தெரியும்மாஜி அமைச்சருக்கு முன் ஜாமின் கிடைக்குமா? இன்று தெரியும்
மாஜி அமைச்சருக்கு முன் ஜாமின் கிடைக்குமா? இன்று தெரியும்
மாஜி அமைச்சருக்கு முன் ஜாமின் கிடைக்குமா? இன்று தெரியும்
மாஜி அமைச்சருக்கு முன் ஜாமின் கிடைக்குமா? இன்று தெரியும்
ADDED : ஜூன் 19, 2024 06:40 AM
கரூர் : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.
கரூர், மேலக்கரூர் சார்ப்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் கொடுத்த புகார்படி, போலியான ஆவணங்கள் தயாரித்து, 22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக, யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது கடந்த, 9ல் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தன்னை கைது செய்து விடாமல் இருக்க, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான விஜயபாஸ்கர், முன் ஜாமின் கேட்டு கடந்த, 12ல் மாவட்ட முதன்மை அமர்வு தலைமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அது தொடர்பான விசாரணை கடந்த, 15ல் நடந்தது. அப்போது, வழக்கு கரூர் சட்டம்-ஒழுங்கு போலீசாரிடம் இருந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி சண்முகசுந்தரம் முன் ஜாமின் மீதான வழக்கு விசாரணையை, இன்றைக்கு ஒத்தி வைத்தார்.இதனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் வழங்கப்படுமா அல்லது முன் ஜாமின் மனு, தள்ளுபடி செய்யப்படுமா என இன்று தெரிய வரும்.