Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 04, 2024 11:30 AM


Google News
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா ரத்து செய்வதாக அறிவித்த ஹிந்து சமய அறநிலைய துறையை கண்டித்து, பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா, 150 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தாண்டு ஏதோ காரணம் காட்டி, தைப்பூச திருவிழாவை ஹிந்து சமய அறநிலையத்துறை ரத்து செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நகர, பா.ஜ., தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார் ஆகியோர், கடம்பவனேஸ்வரர் கோவில் சிறப்பு குறித்தும், தமிழக அரசின் தவறான செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.

தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உடனே தைப்பூச திருவிழா நடைபெறும் என அறிவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். குளித்தலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மண்டல தலைவர்கள், பொதுச்செயலர்கள் கண்ணன், ராஜ்குமார், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், சிவனடியார்கள் என பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us