Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பி.சி., -- எம்.பி.சி., மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கடன் உதவி

பி.சி., -- எம்.பி.சி., மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கடன் உதவி

பி.சி., -- எம்.பி.சி., மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கடன் உதவி

பி.சி., -- எம்.பி.சி., மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கடன் உதவி

ADDED : அக் 04, 2025 01:00 AM


Google News
கரூர், பி.சி., -- எம்.பி.சி., மாணவர்கள், வெளிநாட்டில் படிப்பதற்காக, கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பி.சி., - எம்.பி.சி., பிரிவினருக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்பு, பி.எச்.டி., போன்றவற்றில் முதுகலை படிப்புகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.ஒரு மாணவருக்கு அதிகபட்ச கடன் வரம்பு, 15 லட்சம் ரூபாய். கடன் தொகையானது சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், புத்தகங்கள் கட்டணம் உள்ளடக்கியது. வயது வரம்பு, 21 முதல், 40 வரை இருக்க வேண்டும். இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us