/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
ADDED : செப் 19, 2025 01:18 AM
கரூர், :பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும், 13 வயதிற்கு மேல், 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்ற செயல்கள் புரிந்திருக்க வேண்டும். அக்., 30க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.