/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்
ADDED : ஜூன் 22, 2025 01:09 AM
கரூர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள், நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்த நபர்கள், நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தொண்டு நிறுவனம், டாக்டர், சமுக பணியாளர், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியோருக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுகள் வரும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.