/உள்ளூர் செய்திகள்/கரூர்/பள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி ஏற்புபள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி ஏற்பு
பள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி ஏற்பு
பள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி ஏற்பு
பள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 13, 2024 03:58 AM
அரவக்குறிச்சி,: அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி நேற்று எடுக்கப்பட்டது.பருவ மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், வெள்ள பெருக்குகள் மற்றும் டயர் மற்றும் பிளாஸ்டிக்கை எரிப்பதால் டை ஆக்சின் என்னும் நச்சுப்புகை பரவுவதும், புற்று நோய், தோல்நோய், ரத்த சோகை ஏற்படுவதையும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சாகுல் அமீது எடுத்து கூறினார்.
அதன் பின் கொண்டாடுவோம், கொண்டாடுவோம், புகையில்லா போகியை கொண்டாடுவோம், எரிக்க மாட்டோம், எரிக்க மாட்டோம், பழைய டயர் டியூப், பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம், கொண்டாடுவோம், கொண்டாடுவோம், மாசற்ற போகியை கொண்டாடுவோம், சுற்றுச்சூழல் காப்போம் என்று மாணவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் அனைவரும் புகையில்லா போகியை கடைபிடிப்பது என உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து விவேகானந்தர் பிறந்த தினம் இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது.