/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தென்னிலையில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை தேவை தென்னிலையில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை தேவை
தென்னிலையில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை தேவை
தென்னிலையில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை தேவை
தென்னிலையில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 09, 2025 04:25 AM
கரூர்: க.பரமத்தி அருகே, தென்னிலை பஞ்.,ல், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், 50 சதவீத மக்கள் கூலி தொழிலாளியாக உள்ளனர். இவர்களின் வீட்டில் நடக்கும் காதணி விழா, திருமணம், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த, இந்த பஞ்சாயத்தில் வசதியில்லை. வெளி-யூருக்கு சென்று நடத்தி வருகின்றனர். இங்கிருந்து, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடுமுடிக்கு செல்ல வேண்டியுள்-ளது. கொடுமுடியில் சுப நிகழ்ச்சிகள் நடத்த மண்டபத்துக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வதுடன், உற்றார் உறவினர்கள் வரு-வதற்கு மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுயள்ளது.
இவ்வாறு மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாத ஏழை மக்கள், கோவிலில் வைத்து சிக்கனமாக திருமணத்தை முடித்து கொள்கின்றனர். இருந்தாலும் வரவேற்பு வைக்க போது-மான இடவசதியோ, பொது இடங்களோ இருப்பதில்லை. இவ்-வாறு நிகழ்ச்சிகள் நடத்த வெளியூரில் வைக்க நினைத்தாலும் சில நேரங்களில் நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபமோ, சமுதாயக்கூ-டமோ கிடைப்பதில்லை. சிலர் திருமணம் மற்றும் காதணி விழா நடத்துவதற்கு முன்பு மண்டபம் உள்ளதா என தேடி அலைந்த பிறகே நிகழ்ச்சிகளை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக்-கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழை, நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.