/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக் மீது தனியார் பஸ் மோதி பிறந்த நாளில் வாலிபர் பலி பைக் மீது தனியார் பஸ் மோதி பிறந்த நாளில் வாலிபர் பலி
பைக் மீது தனியார் பஸ் மோதி பிறந்த நாளில் வாலிபர் பலி
பைக் மீது தனியார் பஸ் மோதி பிறந்த நாளில் வாலிபர் பலி
பைக் மீது தனியார் பஸ் மோதி பிறந்த நாளில் வாலிபர் பலி
ADDED : மார் 12, 2025 07:54 AM
குளித்தலை: பைக் மீது தனியார் பஸ் மோதி, பிறந்த நாளன்று வாலிபர் பலியானார்.
திருச்சி மாவட்டம். ஸ்ரீரங்கம் தாலுகா, கீழ பஞ்சப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண், 20. மேல பஞ்சப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அபர்நாத், 20. இருவரும் ஹீரோ பைக்கில் நேற்று மாலை, 4:00 மணியளவில் லாலாபேட்டைக்கு, சொந்த வேலையாக சென்று கொண்டிருந்தனர். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், மருதுார் பிரிவு அருகே சென்ற போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரண் பலியானார்.
பைக் ஓட்டிச் சென்ற அபர்நாத் படுகாயமடைந்து, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பலியான சரணுக்கு, நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறி த்து, குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.