/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு; தனியார் பள்ளி மாணவியர் அசத்தல் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு; தனியார் பள்ளி மாணவியர் அசத்தல்
குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு; தனியார் பள்ளி மாணவியர் அசத்தல்
குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு; தனியார் பள்ளி மாணவியர் அசத்தல்
குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு; தனியார் பள்ளி மாணவியர் அசத்தல்
ADDED : மார் 12, 2025 07:53 AM
கரூர்: குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில், கரூர் தனியார் பள்ளி மாணவியரின் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு இணைந்து, குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டை, கடந்த மாதம் பிப்ரவரியில் புதுக்கோட்டையில் நடத்தியது. இதில், 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' என்ற மைய கருப்பொருளில், 120க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவியர் குணவர்ஷினி, அதிதி ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரன் உதவியோடு உருவாக்கிய 'கரூர் மாவட்ட ஏரிகள்' என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.
இது குறித்து மாணவியர் குணவர்ஷினி, அதிதி கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை ஏரி, 475 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு ஆற்று தண்ணீர் வர கால்வாய் உள்ளது. நீர் வழித்தடங்களை மராமத்து பணி செய்ய, அதிக தொகை தேவைப்படும். இப்பிரச்னையை எளிதில் சரி செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளாக, பருவநிலை மாறுபாட்டால் மழை பெய்கிறது. அவ்வாறு பெய்யும் மழை நீரை, வெள்ளியணை ஏரியில் சேகரிப்பதன் மூலமாக பல்வேறு கிராமங்கள் பயன்பெறும்.
நவம்பர் மாதத்தில் ஏரி வறண்டு காணப்பட்டது. டிச., ஜன., மாதங்களில் பெய்த மழை நீர் தேங்குவதால் மீன்கள், நண்டுகள், இறால் நத்தை மற்றும் தவளை, பாம்புகள் போன்றவை ஒரு உயிர் சூழலை உருவாக்கின. இது போன்று இயற்கை உயிர்சூழல் நிலையை உருவாக்குவதன் மூலமாக, தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி பல்வேறு மறைமுக இயற்கை சார்ந்த நன்மைகளும் கிடைக்கும். இதையே நீர் உயிர்ச்சூழல் மண்டலம் மற்றும் நீர் உயிரினங்களுக்கான வாழ்விடம் என்று கூறுகிறோம்.
எதிர் காலத்தில் பறவைகள் இயற்கை சரணாலயமாக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. மழை நீரை சேகரிப்பதன் வாயிலாக, நேரடியாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுவது மட்டுமின்றி, மாவட்டத்தின் வெப்பநிலையை குறைக்க முடியும் என, கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.