/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓட்டு வங்கியை இரட்டை இலக்காக மாற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை ஓட்டு வங்கியை இரட்டை இலக்காக மாற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை
ஓட்டு வங்கியை இரட்டை இலக்காக மாற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை
ஓட்டு வங்கியை இரட்டை இலக்காக மாற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை
ஓட்டு வங்கியை இரட்டை இலக்காக மாற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை
ADDED : ஜூலை 19, 2024 02:13 AM
கரூர்: ''ஓட்டு வங்கியை, இரட்டை இலக்காக மாற்ற வேண்டும்,'' என, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்ததை தெரிவித்தார்.
கரூரில் காங்., மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். இதில், மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில், தகவல் பெறும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. கடந்த, 10 ஆண்டுக-ளுக்கு மேலாக பாசிச ஆட்சி நடந்து வருகிறது. இதனை மாற்ற வேண்டும் என்றால், காங்., வலிமைப்படுத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரதமராக வரவேண்டும் என்றால், கட்சியை பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு முன், 20 எம்.பி.,க்களை டெல்லி அழைத்து சென்றோம். இது நடக்க வேண்டும் என்றால், நமது வாக்கு வங்-கியை இரட்டை இலக்காக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கரூர் எம்.பி., ஜோதிமணி, முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணி, கரூர் மாநகர வடக்கு பகுதி தலைவர் ஸ்டீபன் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.