/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கரூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கரூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கரூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கரூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ADDED : ஜூலை 19, 2024 02:13 AM
கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடந்தது. இதனை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்த பின், கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும், உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகமானது, மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட, 21 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்ட-றிந்து தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகா-தார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், வட்டார பொது சுகாதார மைய கட்டிடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.