/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேதமடைந்த நிலையில் நிழற்கூடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை சேதமடைந்த நிலையில் நிழற்கூடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேதமடைந்த நிலையில் நிழற்கூடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேதமடைந்த நிலையில் நிழற்கூடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேதமடைந்த நிலையில் நிழற்கூடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2024 02:57 AM
கரூர்:கரூர் - -திருச்சி பைபாஸ் சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்.
திருச்சியில் இருந்து கரூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூர், கோடங்கிப்பட்டி, குன்னனுார், உப்பிடமங்கலம் போன்ற முக்கிய பகுதிகளுக்கான சாலைகள் பிரியும் இடத்தின் இரண்டு புறமும் பொதுமக்கள் நலன் கருதி, நிழற் கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இதில் சில நிழற்கூடங்கள் சேதமடைந்து, பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்கூடத்தில், இளைப்பாற முடியாத நிலையில் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த நிலையில் உள்ள நிழற்கூடத்தை சீரமைக்க, தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.