ADDED : ஜூலை 06, 2024 12:05 AM
அரவக்குறிச்சி : சின்னதாராபுரம் அருகே துாங்கிக் கொண்டிருந்தவர் வீட்டில், மொபைல்போன் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சின்னதாராபுரம் அருகே தும்பிவாடி சிவன் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மனைவி சரஸ்வதி, 31. இவர் கடந்த மாதம், 21ம் தேதி தன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, நாமக்கல் மாவட்டம், மோகனுார், பெரியார் நகர் புதுக்கன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் விக்ரம், 24, கரூர் மாவட்டம் வாங்கல் கோட்டைமேட்டை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் பெரியசாமி, 21, ஆகியோர், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை திருடி சென்றனர்.
இது குறித்து சரஸ்வதி அளித்த புகார்படி, போலீசார் குற்றவாளி-களை தேடி வந்த நிலையில், இருவரையும் சின்னதாராபுரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.