தீயணைப்பு வீரர்கள் நடத்திய ஒத்திகை
தீயணைப்பு வீரர்கள் நடத்திய ஒத்திகை
தீயணைப்பு வீரர்கள் நடத்திய ஒத்திகை
ADDED : ஜூலை 06, 2024 12:05 AM
அரவக்குறிச்சி : தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, அரவக்குறிச்சி தீய-ணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி, அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் அணையில் நேற்று நடைபெற்றது.
ஆற்று நீரில் மூழ்கினால், அவர்களை எவ்வாறு மீட்பது என்பது பற்றியும், வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் கேன் மற்றும் தண்ணீர் கேன்களை பயன்படுத்தி தற்காத்து கொள்வது எப்படி என்பது பற்றி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அரவக்கு-றிச்சி தீயணைப்பு மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் சர-வணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.