/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை
திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை
திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை
திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் வேகத்தடை தேவை
ADDED : ஜூலை 03, 2024 03:04 AM
கரூர்;புலியூரில், திருச்சி--உப்பிடமங்கலம் பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும்.புலியூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து உப்பிடமங்கலம் பிரிவு சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக புலியூர் தனியார் சிமென்ட் ஆலைக்கு தொழிலாளர்கள், உப்பிடமங்கலம் வாரச்சந்தைக்கு காய்கறி வியாபாரிகள் மற்றும் கால்நடை வியாபாரிகள் சென்று வருகின்றனர்.புலியூரில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளிக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்களும், இந்த பிரிவு சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. கரூரில் இருந்து திருச்சி, தஞ்சை, நாகை, அரியலுார், பெரம்பலுார், சென்னை செல்லும் பஸ்கள், இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றன.எப்போதும் வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.சாலையில் அமைக்கப்பட்டிருக்கும், தடுப்பு சுவர்கள் வழியாக நாய்கள் புகுந்து விடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விபத்துகள் அடிக்கடி நிகழ்வதை தடுக்கும் வகையில், திருச்சி-உப்பிடமங்கலம் பிரிவு சாலையில், போர்க்கால அடிப்படையில் வேகத்தடை அமைக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.