/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கனவு இல்ல திட்ட பயனாளிகள் கிராம சபை கூட்டத்தில் தேர்வு கனவு இல்ல திட்ட பயனாளிகள் கிராம சபை கூட்டத்தில் தேர்வு
கனவு இல்ல திட்ட பயனாளிகள் கிராம சபை கூட்டத்தில் தேர்வு
கனவு இல்ல திட்ட பயனாளிகள் கிராம சபை கூட்டத்தில் தேர்வு
கனவு இல்ல திட்ட பயனாளிகள் கிராம சபை கூட்டத்தில் தேர்வு
ADDED : ஜூலை 03, 2024 03:04 AM
கரூர்:கனவு இல்ல பயனாளிகளை தேர்வு செய்ய, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சிஒன்றியம், தாளப்பட்டி பஞ்., கொடையூர்களத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், பஞ்., தலைவர் லதா முருகேசன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம், பயனாளிகள் தேர்வு குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், பஞ்., தேவைகள் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல் திட்டம் குறித்தும், பொதுமக்களின் அனுமதி பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. மாவட்டத்தில், 758 வீடுகள் கட்டித்தரவும், வீடுகள் ஒவ்வொன்றுக்கும் தலா, 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்க நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில், சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும், திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், அதை கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெறலாம். வீடுகள் அனைத்தும் குறைந்தது, 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், செயற்பொறியாளர் சங்கரஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.