/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வீட்டு வாசலில் நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு வீட்டு வாசலில் நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு
வீட்டு வாசலில் நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு
வீட்டு வாசலில் நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு
வீட்டு வாசலில் நின்றிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு
ADDED : ஜூன் 14, 2024 01:07 AM
கரூர்கரூர் மாவட்ட வேலாயுதம்பாளையம் அருகில் திருக்காடுதுறை நவலடி நகர் சேர்ந்தவர் இந்திராணி, 57.
இவர், நேற்று முன்தினம் காலை, 11:15 மணிக்கு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு வேகமாக சென்றனர். அவரது, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள், செயின் பறித்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.