/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ராமர் பாண்டி கொலை வழக்கு மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது ராமர் பாண்டி கொலை வழக்கு மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ராமர் பாண்டி கொலை வழக்கு மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ராமர் பாண்டி கொலை வழக்கு மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ராமர் பாண்டி கொலை வழக்கு மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூன் 14, 2024 01:06 AM
கரூர், ராமர் பாண்டி கொலை வழக்கில் மேலும் இரண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராமர்பாண்டி, கடந்த இரு மாதங்களுக்கு முன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, ஊருக்கு சென்றுகொண்டிருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே, 10 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கைதாகி கோவை சிறையில் இருக்கும் தேனி மாவட்டம்
பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ஜெகதீஸ்வரன், 23, மதுரை மேலுாரை சேர்ந்த சிவக்குமார் மகன் தமிழ்செல்வன், 30, ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, கரூர் எஸ்.பி., பிரபாகர் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், ஜெகதீஸ்வரனும், தமிழ்செல்வனும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். அவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.